இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

வீட்டுக்குள்ளே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்; பிரதமர் மோடி

வீட்டுக்குள்ளே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்; பிரதமர் மோடி

உலகம் முழுவதையும் ”கொரோனா வைரஸ்” அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்குள் நாள் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசால் இந்தியாவில் 315- பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்று, ”மக்கள் ஊரடங்கை” கடைபிடிக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வலியுறுத்தினார். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இதன்படி, நாடு முழுவதும் மக்கள், ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர். நாட்டின் முக்கிய நகரங்களிலும் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. இதற்கிடையே, பிரதமர் மோடி இன்று காலை வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறியதாவது; – மக்கள் ஊரடங்கில் அனைவரும் பங்கேற்போம்.

கொவிட்-19 (கொரோனா வைரஸ்) அச்சுறுத்தலுக்கு எதிராகப் போராட மிகப்பெரிய பலத்தை அது கொடுக்கும். தற்போது நாம் எடுக்கும் நடவடிக்கைகள் வரும் காலங்களில் உதவும். வீட்டுக்குள்ளேயே இருங்கள். ஆரோக்கியமாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

Today rasi palan 22.03.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 22 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் 258 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் 258 ஆக உயர்வு!

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close