தமிழீழ செய்திகள்முக்கிய செய்திகள்

போராளிகள் அனைவரும் ஒண்றிணைவர்

விடுதலை புலிகள் மக்கள் பேரவை

போராளிகள் அனைவரும் ஒண்றிணைவர்

எதிர்வரும் காலங்களில் போராளிகள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருப்பதாக விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் தலைவர் மலரவன் தெரிவித்தார்.

விடுதலைபுலிகள் மக்கள் பேரவையின் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்றது.

அதன்பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மக்களை ஒருங்கிணைப்பதுடன் எதிர்வரும் தேர்தல் காலங்களில் நாம் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாக இன்று கலந்துரையாடியிருக்கிறோம்.

விடுதலை புலிகள் மக்கள் பேரவையின் அரசியல் வேலைத்திட்டமும், நகர்வுகளும் மக்களை உள்ளடக்கியதாக அவர்களின் ஆலோசனைகளை பெறும் வகையில் தான் பயணித்து கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் நாம் எப்படி பயணிப்போம் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்.

முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான புதிய கூட்டணியிடம் இருந்து எமக்கு எந்தவித அழைப்புகளும் வரவில்லை. அது தொடர்பாக நாங்களும் எந்த விருப்பத்தையும் தெரிவிக்கவில்லை. மக்களின் நலன்சார்ந்த வேலைதிட்டமொன்று தமிழ் நிலப்பரப்பில் நிறைவேறுமானால் எதிர்வரும் காலங்களில் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஆலோசித்து முடிவெடுப்போம்.

நாம் எந்த ஒரு தனிநபரையும் தாக்ககூடிய வகையிலான பேச்சினை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் எதிர்வரும் காலங்களில் போராளிகள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

இதன்போது கருத்து தெரிவித்த கட்சியின் மகளீரணி தலைவி,

நாம் போராளிகளாக இருக்கும் காலத்தில் பெண்கள் தனித்துவமாகவும் உயர்ந்த இடத்திலும் வைக்கப்பட்டிருந்தார்கள். தற்போது பெண்களிற்கான கௌரவம் பேணப்படுவதில்லை. பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலை தொடர்பாக எந்த அரசியல் வாதிகளும் கருத்தில் கொள்வதில்லை.

எனவே நாம் விடுதலை புலிகள் மக்கள் பேரவையுடன் இணைந்து எமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக பயணிப்போம் என்றார்.

நடிகர் விஜய் ரசிகர்களை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு

கணவனைக் கொன்ற மனைவி பகீர் தகவல்!

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close