முக்கிய செய்திகள்இலங்கை செய்திகள்

நட்பு நாடுகளுடன் இணைந்து ஜெனிவாச் சமரை எதிர்கொள்வோம்!

- இப்படிச் சொல்கின்றார் மஹிந்த

“இலங்கையின் நட்பு நாடுகளுடன் இணைந்து ஜெனிவா விவகாரத்தை எதிர்கொள்ளவுள்ளோம்.”

– இவ்வாறு தெரிவித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

தமிழ் ஊடகங்களின் தலைமை செய்திப் பொறுப்பாளர்களை – பத்திரிகை ஆசிரியர்மாரை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில், ஐ.நாவின் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான விவகாரம் குறித்து கேட்கப்பட்டபோது, தமது நட்பு நாடுகளுடன் இணைந்து அதனை எதிர்கொள்ளவுள்ளதாகப் பிரதமர் பதிலளித்தார்.

இலங்கையில் தேர்தலொன்று வரவுள்ள சூழ்நிலையில் எவ்வாறாயினும் இம்மாதம் மார்ச்சில் இடம்பெறவுள்ள அமர்வில் இலங்கைக்கு எவ்வித சவால்களும் இல்லை எனவும் பிரதமர் மஹிந்த மேலும் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close