Breaking News

தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் மது விற்பனை எவ்வளவு தெரியுமா ?

தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் மது விற்பனை எவ்வளவு தெரியுமா?

இன்று முழு ஊரடங்கு நடைபெறுவதால், நேற்று (சனிக்கிழமை) மது விற்பனை அதிகமாக நடைபெற்றுள்ளது. நேற்று மதுபானக் கடைகளில் கூட்டம் அலை மோதியது.

அந்த வகையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 188 கோடியே 86 லட்சம் ரூபாய்க்கு மதுமானம் விற்பனை நடந்துள்ளது.

அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 44 கோடியே 85 லட்சத்துக்கும், திருச்சி மாவட்டத்தில் 42 கோடியே 72 லட்சத்துக்கும், சேலம் மாவட்டத்தில் 40 கோடியே 70 லட்சத்துக்கும், சென்னையில் 21 கோடியே 69 லட்சத்துக்கும், கோவையில் 38 கோடியே 90 லட்சத்துக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த வார சனிக்கிழமை மட்டும் 177 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த வார சனிக்கிழமை( நேற்று) 188 கோடியே 86 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை முக்கிய செய்திகள் 02/08/2020 – Jaffna Tamil | Sri Lanka News Tamil | World News Tamil

About அருள்

Check Also

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி தமிழக அரசு முதல் கட்டமாக 6 லட்சம் அரசு, …