சினிமா செய்திகள்முக்கிய செய்திகள்

”சசிகலா குறித்த வசனத்தை நீக்க தயார்”; லைகா

தர்பார் திரைப்படத்தில் இடம்பெற்ற சசிகலா தொடர்பான சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கத் தயார் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயகத்தில் நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தர்பார்.

பல காலம் கழித்து இத்திரைப்படத்தில் ரஜினி போலீஸாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தில் “காசு இருந்தால் ஜெயிலில் ஷாப்பிங் கூட போகலாம்” என ஒரு வசனம் இடம்பெறுகிறது. அவ்வசனம் சசிகலா குறித்து எழுதப்பட்டதாக சர்ச்சைகள் கிளம்பின.

இந்நிலையில் தர்பார் திரைப்படத்தில் இருந்து சசிகலா குறித்த சர்ச்சை வசனத்த நீக்க தயார் என லைகா தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் தனிப்பட்ட நபரை விமர்சித்தோ, புண்படுத்தியோ எந்த வசனமும் எழுதவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

தர்பார் படக்குழுவை எச்சரித்த சசிகலா தரப்பு

Tags
Show More

Related Articles

Back to top button
Close