Wednesday , January 16 2019
Home / இலங்கை செய்திகள் / பொன்னான தருணத்தை நாம் இழந்துவிடக்கூடாது!

பொன்னான தருணத்தை நாம் இழந்துவிடக்கூடாது!

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான இந்தப் பொன்னான தருணத்தை நாம் இழந்துவிடக் கூடாது எனவும், புதிய அரசமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளிலிருந்து இறுதிவரை பின்வாங்கப் போவதில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று கூடிய அரசமைப்பு சபையில் புதிய அரசமைப்பு குறித்த யோசனையை முன்வைத்து உரையாற்றிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பு உருவாக்கத்தில் உள்ள பிரதான தமிழ்க் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது.

இந்நாட்டின் அரசமைப்பு அனைவரது ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்டது என்ற அடிப்படையில் எமது பங்களிப்பை வழங்கியுள்ளோம்.

இரண்டு பிரதான தரப்புகளும் இதனை உணர்ந்துகொள்ள வேண்டும்.

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான இந்தப் பொன்னான தருணத்தை நாம் இழந்துவிடக் கூடாது.

இதேவேளை, புதிய அரசமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்ட அறிக்கை மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும்” – என்றார்.

Check Also

வாழைச்சேனையில் சிறுவன் கொடூரமாக அடித்துக் கொலை!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய சனூஸ்தீன் முகம்மட் சகீர் எனும் …