Breaking News
Home / தமிழீழ செய்திகள் / முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள் !
மாவீரர்நாள்

முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 8
    Shares

தமிழீழ விடுதலைப்போரில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு துயிலுமில்லங்களில் இன்றையதினம் இடம்பெற்றது .

படையினர் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மக்கள் தமது பிள்ளைகளை உறவினர்களை நினைவில் இருத்தி துயிலுமில்லங்களுக்கு சென்று தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர் .

முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் ,முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் , களிக்காடு மாவீரர் துயிலுமில்லம் ,முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம் , இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் ,தேராவில் மாவீரர் துயிலுமில்லம், வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் ,தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லம், இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம் ,ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் ,முல்லைத்தீவு நகர கடற்கரை ஆகிய பதினொரு துயிலுமில்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது .

மக்கள் வீடுகளிலும் , வியாபார நிலையங்களிலும் , ஆலயங்களிலும் , பொது இடங்களிலும் விளக்கேற்றி மாவீரரை நினைவேந்தினர்.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 8
    Shares

Check Also

அன்புமணி

இலங்கையையும் குடியுரிமைச் சட்டத்தில் சேர்க்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Shares இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற வலியுறுத்துவோம் என்று, பாமக இளைஞரணி தலைவரும் …