Breaking News
பிரான்சில் கொரோனா இரண்டாவது அலை - மீண்டும் ஊரடங்கு

பிரான்சில் கொரோனா இரண்டாவது அலை – மீண்டும் ஊரடங்கு

பிரான்சில் கொரோனா இரண்டாவது அலை – மீண்டும் ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மீண்ட பல ஐரோப்பிய நாடுகளில் தற்போது இரண்டாவது அலை உருவாகி உள்ளது.

கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமாகி பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் கட்டுப்பாடுகள் படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரான்சில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தொடங்கியுள்ளது. இதனால், அந்நாட்டில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவும் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

பிரான்சில் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கையை அறிவிப்பது குறித்து அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சில முடிவுகளை எடுத்துள்ளார்.

புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான வழிமுறையை அவர் தொலைக்காட்சியில் மக்களிடம் உரையாற்றினார்.

பிரான்சின் இன்றைய நிலவரப்படி 8 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட பிரான்சின் சில பகுதிகளுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. பாரிஸ் நகரிலும், பிரான்சை சுற்றியுள்ள எட்டு நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது நகரங்களும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் குறைந்தது நான்கு வாரங்களுக்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவுக்கு கடுமையாக்கப் பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை டிசம்பர் 1 ஆம் வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவு வரும் சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கி, பாரிஸ் நகரின் பெரு நகரங்களிற்கும் நடைமுறைக்கு வருகின்றது.

ஒன்பது பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களிற்கு அபராதம் விதிக்கப்படும், ஊரடங்கு உத்தரவு பகுதிகளுக்குள், மக்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

பொது போக்குவரத்து தொடர்ந்து இயங்கும். மற்றவர்களைப் பாதுகாக்கவும், முதியவர்களையும்,பாதிக்கப்படக்கூடியவர்களையும் பாதுகாக்கவும், சுகாதார சேவை மற்றும் சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்கவும், கொரோனா பரவுவதை நாம் தடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத்தொடங்கியுள்ளதால் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

Today rasi palan – 15.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 15, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 26.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 26, 2020)

Today rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 25, 2020)

Today rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 25, 2020)   இன்றைய …