Breaking News
முதியவரின் கை, கால்களை கட்டி வைத்த மருத்துவமனை

முதியவரின் கை, கால்களை கட்டி வைத்த மருத்துவமனை

முதியவரின் கை, கால்களை கட்டி வைத்த மருத்துவமனை

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் முதியவர் ஒருவர் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ள சம்பவம் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஷாஜாபூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு முதியவர் படுக்கையில் கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

80 வயதான லக்ஷ்மி நாராயண், வயிற்று வலி காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக ஷாஜாபூர் பகுதியிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜ்கர் மாவட்டத்தில் இருந்து வந்துள்ளார்.

சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் அவரது குடும்பம் பணம் செலுத்தியது ஆனால் டிஸ்சார்ஜ் ஆகும் போது மருத்துவமனை சார்பில் ரூ.11,270 கூடுதலாக செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. முதியவரின் குடும்பம் அந்த பணத்தை செலுத்தவில்லை.

இத்னால் மருத்துவமனை ஊழியர்கள் முதியவர் வெளியே சென்று விடக்கூடாது என்பதற்காக சிகிச்சை அளித்த படுக்கையிலேயே கைகால்களை கட்டி போட்டனர். இது குறித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி உள்ளது.

இதைதொடர்ந்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

குவைத்தில் வரும் புதன்கிழமை முதல் ஒரு சில மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதி

About அருள்

Check Also

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்?

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்?

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்? காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள விவசாயிகளுடன் நேற்று …