Breaking News
சிம்புவுக்கு

பணம் தராவிட்டால் வீடு ஜப்தி: சிம்புவுக்கு எச்சரிக்கை

அரசன்’ படத்திற்காக வாங்கிய முன் பணத்தை திருப்பி தராவிட்டால், வீட்டில் இருக்கும் பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் சிம்புவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு ‘அரசன்’ திரைப்படத்திற்காக சிம்புவுக்கு கொடுக்கப்பட்ட ரூ.50 லட்சம் பணத்தை வட்டியுடன் சேர்த்து ரூ.85 லட்சத்தை திருப்பி தரக் கோரி ஃபேஷன் மூவி மேக்கர்ஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

திரைப்படத்தில் நடிக்க முன்பணம் பெற்றுக் கொண்டு நடிக்காமல் காலம் தாழ்த்தியதால் தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக ஃபேஷன் மூவி மேக்கர்ஸ் தரப்பு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், திரைப்படத்தில் நடிக்க முன்பணமாக வாங்கிய ரூ.50 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து ரூ.85.50 லட்சத்தை சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்துக்கு வழங்க வேண்டும்.

பணத்தை திருப்பி தர உத்தரவாதம் தராவிட்டால், வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என நடிகர் சிம்புவை நீதிபதி எச்சரித்தார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …