Breaking News
டேனியலை அடித்த மகத்

டேனியலை அடித்த மகத்

இன்றைய நிகழ்ச்சியில், பிக் பாஸ் அவன் என்ன அடிச்சிட்டான் இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாதுன்னு டேனியல் மகத்தை பற்றி சொல்லுவதாக புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 65 நாட்களைப் போட்டியாளர்கள் கடந்துள்ளனர்.

இதுவரை 7 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், இந்த வாரம் பாலாஜி, மகத், சென்ராயன், மும்தாஜ் ஆகியோர் எவிக்‌ஷனுக்கு நாமினேட் ஆகியுள்ளனர்.

நேற்றைய போட்டியில் மகத் மும்தாஜை படுமோசமாக விமர்சித்தும், டேனி மீது முட்டையை உடைத்தும் , அவருடன் மல்லுக்கு நின்றார். இதனிடையில் டேனிக்கும் மகத்துக்கும் சண்டை முட்டிக்கொள்ள டேனி தன்னை மகத் கையில் கடித்து விட்டதாக மும்தாஜ், பாலாஜியிடம் கூறினார்.

ஆனால் டேனியும் தன்னைத் தாக்குவதாக குற்றம் கூறிய மகத், அவர் வேண்டுமென்றே தன்னை ட்ரிகர் பண்ணுவதாக யாஷிகா மற்றும் ஐஸ்வராயாவிடம் புலம்பினார்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.அதில், மகத், சென்றாயன் ஒரு அணியிலும், டேனியல், பாலாஜி, யாஷிகா மற்றொரு அணியிலும் இருக்கின்றனர்.

அப்போது மகத் ஏதோ ஒரு பொருளை எடுத்துக் கொண்டு சென்று ஓட அதை டேனி தடுக்கிறார்.

மகத் டேனியலை பிடித்துத் தள்ளி விட மகத் தன்னை அடிப்பதாக டேனி கத்துகிறார்.உடனே கேமரா முன் நின்று என்னை அவன் அடிச்சிட்டான் பிக் பாஸ் இதுக்கு மேலே பொறுமையா இருக்க முடியாதுனு டேனியல் சொல்கிறார்.

உடனே எப்படி நீ அவன அடிக்கலாம்ன்னு பாலாஜி மகத்தை பார்த்து கேட்க, இருவருக்கும் சண்டை முட்டிக் கொள்கிறது.

இந்த வார டாஸ்க் ஆரம்பத்திலிருந்தே டேனியலுக்கும், மகத்துக்கும் இடையே சண்டை வலுத்துக் கொண்டே போகிறது. அந்த வகையில் இன்றும் பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சமிருக்காது என்றே தோன்றுகிறது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …