Breaking News
உள்ள வெளிய லவ் மஜா பண்ணும் மகத்!

உள்ள வெளிய லவ் மஜா பண்ணும் மகத்!

பிக் பாஸ் வீட்டின் காதல் மன்னனாகும் தகுதி மகத்திற்கு தான் இருப்பதாக நெட்டிசன்கள் தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 64 நாட்கள் கடந்துள்ள நிலையில், போட்டியில் இருந்து 7 பேர் வெளியேறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் மும்தாஜ், மகத், ஐஸ்வர்யா, சென்ராயன். பாலாஜி உள்ளிட்டோர் நாமினேட் ஆகினர்.

இதில் இருந்து ஐஸ்வர்யாவை பிக் பாஸ் வீட்டின் தற்போதைய தலைவி யாஷிகா காப்பாற்றியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இன்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் விருது வழங்கும் நிகழ்வு மூலம் போட்டியாளர்களுக்கும் மோதல் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, பிக் பாஸ் வீட்டின் தலைவி யாஷிகா நடத்தும் நீதி விசாரணையில் குற்றவாளி கூண்டில் நிற்கும் மகத்திடம் நேரடியாகவே தனது காதல் குறித்த சந்தேகங்களை யாஷிகா தெளிப்படுத்தி கொள்கிறார்.

இது தொடர்பான புரொமோவில், ‘நீ என்கிட்ட ஒன்னு பேசிட்டு வெளிய ஒன்னு பேசறது ஹர்ட் ஆவதாக யாஷிகா கூறுகிறார்.

எனக்கு வெளிய ஒரு லவ் இருக்கு தான் ஆனால், உங்க மேலயும் எனக்கு லவ் இருக்குன்னு மகத் ஒப்புக் கொண்டவுடன், யாஷிகாவின் முக வெட்கத்தில் சிவக்கிறது.

இந்த உள்ளே வெளியே லவ்வை விமர்சிக்க வரும் பாலாஜி, வெளிய ஒன்னு இருக்கு, உள்ளயும் வேணும்னா எது நிஜம் என நியாயமான கேள்விகளை கேட்கிறார்.

லவ்வில் டபுள் கேம் ஆடும் மகத்திற்கு ஒரிஜினல் காதல் மன்னன் உலகநாயகன், உள்ளே வெளியே ஆட சொல்லிக் கொடுப்பாரா அல்லது ஆடுபுலி ஆட்டம் ஆடி அடிச்சு விரட்டுவாரா என்பது இந்த வார இறுதியில் தெரியவரும்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …