Breaking News
மகத்துக்கு ஒரு குறும்படம் பார்சல்

மகத்துக்கு ஒரு குறும்படம் பார்சல்..!

பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் அராஜகம் செய்த மகத்திற்கு இன்றைய நிகழ்ச்சியில் குறும்படம் காத்திருப்பதாக கமல் தெரிவித்துள்ளார்.

விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 70 நாட்களை எட்டியுள்ளது. இதுவரை போட்டியில் இருந்து 7 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வார எவிக்‌ஷனில் மகத், பாலாஜி, மும்தாஜ், சென்ராயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே, பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் எண்ட்ரியும் துவங்கிவிட்டது. முதல் வைல்ட் கார்ட் போட்டியாளராக நடிகை விஜயலக்ஷ்மி இணைந்துள்ளார். இன்றைய நிகழ்ச்சியில் விஜயலக்ஷ்மியை கமல்ஹாசன் வரவேற்பார்.

மேலும், சென்ற வாரம் கொடுக்கப்பட்ட பெரும்பாலான டாஸ்க்குகளில் மகத் வரம்புமீறி நடந்துக் கொண்டதாகவும், மும்தாஜை கார்னர் செய்து டீஸ் பண்ணியது போன்ற செயல்கள் பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்திய ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

இன்றைய நிகழ்ச்சி தொடர்பான புரொமோ வீடியோவில், பிக் பாஸ் முதல் சீசனில் வந்த ஆவரேஜ் ஐகியூ மட்டம் இந்த சீசனில் மிகவும் கம்மியாக உள்ளது. மும்தாஜ்-மகத் இருவரில் யாரின் செயல்பாடு சரியில்லை என மக்களிடம் கமல் கேட்க, அனைவரும் கோரசாக ‘மகத்’ என கூறுகின்றனர். இதற்கு சிரிப்பை மட்டும் வெளிப்படுத்திய மகத்தின் வாயை பிடுங்கிய கமல், நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம் ஒரு குறும்படம் போடலாமா? என கேட்கிறார்.

ஆக இன்றைய நிகழ்ச்சியில் மகத் மீது பார்வையாளர்களுக்கு இருக்கும் காண்டு கமல்ஹாசனுக்கும் இருப்பதாக தெரிகிறது. குறும்படம் போட்டு மகத்தை இன்று பிரித்து மேயப்போகிறார் கமல் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …