Sunday , July 22 2018
Breaking News
Home / Headlines News / தமிழருக்கு எச்சரிக்கை விடுத்த மகிந்த அணி..

தமிழருக்கு எச்சரிக்கை விடுத்த மகிந்த அணி..

சிங்களவர்கள் விழித்துக்கொண்டால் என்ன நடக்கும்? என்பதை சிந்தித்துக்கூட பார்க்க முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பு எச்சரித்துள்ளது.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின்நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த……

“ சிங்களவர்கள் நித்திரையில்இருப்பதாக விஜயகலா என்ற அந்த பெண் புலி நினைத்துக்கொண்டிருக்கின்றார். இல்லைசிங்களவர்கள் நித்திரையில் இல்லை. நாங்கள் விழித்துக் கொள்ளும் நேரமொன்றுஇருக்கின்றது. நாம் விழித்துக்கொள்ளும் போது தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் எவராலும் எம்மை தடுக்க முடியாது. அதனால் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தி விஜயகலாவிற்கு எதிராக கடுமையான தண்டனையை வழங்கவேண்டும். அமைச்சர் பதவியிலிருந்து அகற்றி அல்லது அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு கூறுவதால் அதாவது மக்களுக்கு இனிப்புக்களைக் கொடுத்து ஏமாற்ற முயற்சிக்கக் கூடாது. அவ்வாறான முயற்சியில் ஈடுபட்டால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது படுக்கை மெத்தைகளை சுருட்டிக்கொண்டு வீட்டிற்கு ஓட வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்” என்றார்

நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முன்னாள்அமைச்சர் விஜயகலா போன்றவர்கள் நாட்டை அழிக்கும் வகையில் இவ்வாறான பிரசாரங்களைமுன்னெடுக்கும் போது அவற்றை தடுக்காது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வேடிக்கைபார்த்துக்கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டிய மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் பியல்நிஸாந்த, மைத்ரிபாலவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிச் செல்லுமாறும்வலியுறுத்தியுள்ளார்.

“ நாடு மிகவும் மோசமான நெருக்கடியை நோக்கி தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஆனால்இரவு பத்து மணிக்கு நித்திரைக்குச் செல்லும் எமது நாட்டின் ஜனாதிபதியோ நாடு முகம்கொடுத்துள்ளமிகவும் பாரதூரமான பிரச்சனைகளை மறுநாள் நித்திரையில் எழுந்து பத்திரிகைகளைபார்க்கும் போதே அறிந்துகொள்கின்றார்.

எரிபொருட்களின் விலை அதிகரிக்கின்றது.கல்வித்துறையை சீரழிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் ஆசியர்கள் மீது தாக்குதல்நடத்தப்படுகின்றது. மறுபுரம் இந்த நாட்டை காட்டிக்கொடுக்கின்றனர்.

நல்லாட்சிஅரசாங்கத்தில் அமைச்சர்களாக இருப்பவர்கள் தமது குறுகிய அரசியல் தேவைகளுக்காகஇனங்களுக்கிடையில் மோதல்களை தூண்டிவிடும் வகையில் பல்வேறு இனவாத கருத்துக்களைவெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் இவை அனைத்தையும் நாட்டின் ஜனாதிபதி மறுநாள்பத்திரிகைகளில் வரும் போதே அறிந்துகொள்கின்றார். பத்திரிகைகளில் செய்திகளைகண்டதும் அவர் சிறிது தடுமாற்றம் அடைகின்றார். தடுமாறும் அவர் தனது நாடகத்தைஉடனடியாக அரங்கேற்றுகின்றார்.

ஆனால் இந்த நாடகம் இன்று அம்பலமாகிவிட்டது. அதனால்கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடகத்தை நிறுத்திவிட்டு, நாட்டைசீரழிவில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை செய்ய முடியாவிட்டால்உடனடியாக ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி ஆட்சியை சரியாக நடத்தக்கூடியவர்களிடம்அந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்” என்றார் பியல் நிஷாந்த.

Check Also

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.?வெளிவந்த தகவல்..! காரணம் இதோ.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார வெளியே போகும் போட்டியாளர்கள் பட்டியலில் பாலாஜி, பொன்னம்பலம், ஜனனி ஐயர், ரம்யா, ஐஸ்வர்யா …