தமிழ் கவிதைகள்

மலர்ந்த மலர்கள்

“மலர்ந்த மலர்கள்….”

மலர்ந்த மலர்களையே
மலர்மாலை தொடுத்தே
மனமார விற்கையிலும்
மதியையும் விதி வெல்லுதே….

வயிற்றுப் பசியிலே
வழியின் ஓரமாய்
வாடியே தூங்கிவிட்டேன்
வழிநடத்த ஆட்களின்றி….

பதினாறு செல்வங்களை
படைத்த இறைவனும்
பாதியும் தராமலே
பரிதவிக்க ஏன் விட்டாயோ…..

இறைவனும் படைத்தானே
இவ்வுலகில் வாழ்ந்திடவே
இளமையில் வறுமையும்
இனிமையான விசமாகுதே….

வாடிக்கையாளரோ சிலர் – ஆனால்
வேடிக்கை பார்ப்பவர்களோ பலர்….

மாறுமோ தலைவிதி
மன்னன் மாறினாலும்…..

குறிப்பு :-
வலிகளைச் சுமந்து வரும் வரிகள்
வலிப்பதற்காகவில்லை பிறர்
வலிகளையும் புரிவதற்காகவே….

நீர்வையூர்,
கவிஞர் த. வினோத்.

vinothan

இதையும் பாருங்க :

மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட பரவை முனியம்மா

சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிக் பாஸ் பிரபலம்.

மீண்டும் உச்சத்தை தொட்ட வெங்காய விலை!

Tags
Show More

Related Articles

Back to top button
Close