இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

மாமல்லபுரத்தில் மத்திய பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு

மாமல்லபுரத்தில் மத்திய பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங் பிங் மாமல்லபுரம் வருகைத்தர உள்ளதால் மத்திய பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வரும் 11ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர். அப்போது பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

இருதலைவர்களின் வருகையொட்டி, மாமல்லபுரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாமல்லபுரத்தில் உள்ள கலை சின்னங்களை இருதலைவர்களும் நேரில் பார்வையிட உள்ளனர்.

இந்தநிலையில் மத்திய பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு பாதுகாப்பு பிரிவு காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாள்கள்

Tags
Show More

Related Articles

Back to top button
Close