Breaking News
Home / உலக செய்திகள் / 81 வயது பாட்டியை திருமணம் செய்த 24 வயது இளைஞர்!
திருமணம்

81 வயது பாட்டியை திருமணம் செய்த 24 வயது இளைஞர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 9
    Shares

கட்டாய ராணுவச் சேர்க்கை அமலில் உள்ள உக்ரைனில், ராணுவத்தில் சேர்வதில் இருந்து தப்பிக்க 24 வயது இளைஞர் ஒருவர் 81 வயது பாட்டியை திருமணம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

உக்ரைனில் கட்டாய ராணுவச் சேர்க்கை அமலில் உள்ளது. ஆனால் அதற்கு சில விதி விலக்குகள் உள்ளன. மனைவி மாற்றுத் திறனாளியாக இருந்தால், அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டி இளைஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், 24 வயதான அலெக்ஸாண்டர் கொன்ட்ராட்யுக் என்ற இளைஞர், கிராமத்தில் வைத்து தனது திருமண உறவு முறை கொண்ட 81 வயதான ஸினைடா இல்லாரியோனோவ்னா-வை திருமணம் செய்துள்ளார்.

ஒவ்வொரு முறை ஆள்சேர்ப்புக்கு ராணுவத்தில் இருந்து வரும் போதும் தனக்கு திருமணமான சான்றையும், தன் மனைவியின் மாற்றுத் திறனாளி சான்றையும் வழங்கி ராணுவத்தில் சேர்வதில் இருந்து இளைஞர் தப்பியுள்ளார்.

இருவரும் போலியான திருமண வாழ்க்கை வாழ்வதாகவோ அல்லது இருவருக்கும் பொதுவான பொருட்கள் வீட்டில் இல்லை என கருதப்பட்டாலோ திருமணத்தை ரத்து செய்து ராணுவத்தில் சேர்க்கலாம் என சட்டம் கூறுகின்றது. ஆனால், சட்டப்படி சான்றுகள் வைத்திருப்பதால் அவர் ராணுவத்தில் சேர வேண்டிய அவசியமில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இளைஞர்
இளைஞர்
இளைஞர்

பிக்பாஸ் ஓட்டு எல்லாம் சரியான போங்கு… சாடிய நடிகர்..!


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 9
    Shares

Check Also

ப.சிதம்பரம்

சிறை வாசத்தால் ப.சிதம்பரம் ஐந்து கிலோ எடை குறைந்துவிட்டார்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!9Shares ப.சிதம்பரம், 43 நாள்கள் சிறை வாசத்தில் 5 கிலோ எடை குறைந்துள்ளார் என்று அவருடைய வழக்கறிஞர் …