Breaking News

மாடுகளை வெட்டி இறைச்சியாக்கி நீர்கொழும்பு கொண்டு சென்றவர் கைது

மாடுகளை வெட்டி இறைச்சியாக்கி நீர்கொழும்பு கொண்டு சென்றவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமாக 710 கிலோ மாட்டிறைச்சியை லொறி ஒன்றில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவரைக் கொச்சிக்கடை பொலிஸார் நேற்று (2) கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்பு சந்தியில் பாலம் அருகில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எட்டு மாடுகளை வெட்டி இறைச்சியாக்கி தங்கொட்டுவை பிரதேசத்திலிருந்து லொறி ஒன்றில் ஏற்றிவரும்போதே பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

பொதுச் சுகாதார அதிகாரிகளின் அனுமதிப்பத்திரம், இறைச்சியைக் கொண்டு செல்வதற்கான அனுமதிப் பத்திரம் , மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்கு (புத்தளம் மாவட்டத்திலிருந்து கம்பஹா மாவட்டத்துக்கு) கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் ஆகியன இன்றி சந்தேக நபர் 710 கிலோ மாட்டிறைச்சியை நீர்கொழும்பு நகருக்கு கொண்டு வரும்போதே தோப்பு சந்தியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் போதுமானளவு நோய்தடுப்பு மருந்துகள் காணப்படுகின்றனஇலங்கையில் போதுமானளவு நோய்தடுப்பு மருந்துகள் காணப்படுகின்றன

பிரதமருடன் கலந்தரையாடலில் கலந்து கொள்ள உள்ள உறுப்பினர்கள்பிரதமருடன் கலந்தரையாடலில் கலந்து கொள்ள உள்ள உறுப்பினர்கள்

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …