Breaking News
மனைவியை

மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவர்

நண்பருடன் தகாத உறவு வைத்திருந்த மனைவியை கணவன் வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர்கள், ஜான் கிளேனர் -ஆரோக்கிய மேரி தம்பதியினர். இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் ஜான் கிளேனர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஜான் கிளேனரின் நண்பர் தமிழ் என்பவருடன் ஆரோக்கிய மேரிக்கு தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் தனிமையில் இருப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்த ஜான் கிளேனர், மனைவி ஆரோக்கிய மேரியை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே ஆரோக்கிய மேரி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஜான் கிளேனரை கைது செய்துள்ள திருத்துறைப்பூண்டி போலீசார், தலைமறைவாகியுள்ள தமிழை தேடி வருவதாகக் கூறியுள்ளனர். இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில், தாயின் தகாத உறவால் குடும்பமே சீரழிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வு இல்லாத முழு ஊரடங்கு …