Breaking News

இலங்கையில் இருந்து வெளியேறிய மங்கள!

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்காகத் தீவிர பரப்புரைப் பணிகளில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மங்கள வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் மீண்டும் ஜனவரி மாத இறுதியில் மீண்டும் இலங்கை வருவதற்கு வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் தோல்வியின் பின்னர் விரைவில் வெளிநாடு சென்று விடுமாறு மங்கள சமரவீரவுக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை வழங்கியிருந்தனர் என்று குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

About விடுதலை

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …