Breaking News
பேரணியில் மயங்கி விழுந்த ஆதரவாளர்கள்

பேரணியில் மயங்கி விழுந்த ஆதரவாளர்கள்

மு.க.அழகிரி நடத்திய அமைதி பேரணியில் கலந்து கொண்ட ஏராளமானோர் மயங்கி விழுந்தனர்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடம் நோக்கி மு.க.அழகிரி இன்று அமைதி பேரணி நடத்தினார்.

திருவல்லிக்கேணியில் இருந்து இன்று காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த பேரணியில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என அழகிரி அறிவித்திருந்தார்.

ஆனால் பேரணியில் 10,000 பேர் கலந்துகொண்டது அழகிரிக்கு கடும் அதிர்ச்சியை அளித்ததாக கூறப்படுகிறது.

அந்த விரக்தியின் வெளிப்பாடாகத்தான் பேரணியில் கலந்து கொண்டவர்களை அழகிரி தாக்க முற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பேரணியில் 10,000 பேர் கலந்து கொண்டது ஒரு புறமிருக்க கலந்து கொண்டவர்களில் ம்பம் முன்னாள் சேர்மன் இளங்கோவன் உட்பட பலர் வெயிலை தாங்காமல் மயங்கி விழுந்தபடி இருந்தனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்களை முறையாக வழிநடத்தவில்லை எனவும், அவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளையும் அழகிரி தரப்பினர் சரிவர செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி லட்சம் பேரை அழகிரியால் கூட்ட முடியவில்லை எனினும் அவர் 10,000 பேரை கூட்டுவார் என திமுக தரப்பு எதிர்பார்க்கவில்லை என தகவல்கள் வெளியாகின்றன.

மேலும், மாலையில் அவர் பேரணியை நடத்தியிருந்தால் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை இன்னும் சில ஆயிரங்களை எட்டியிருக்கும் எனவும் பத்திரிகையாளர்களும், அரசியல் நோக்கர்களும் கூறி வருகின்றனர்.

கூட்டத்தை கூட்டுவதைவிடவும் அந்த கூட்டத்திற்கு நேரம் தவறாமல் வருவது, கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான சவுகரியங்களை செய்வது போன்றவற்றில் அழகிரி இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …