Breaking News

லெபனானை உலுக்கிய கோர வெடிவிபத்து: 78 பேர் பலி, 4000 பேர் காயம்!

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டை இன்று ஒரு பெரிய வெடிப்பு உலுக்கியது, ஆனால் இந்த வெடி விபத்து குறித்த சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.

பிற்பகலில் நிகழ்ந்த இந்த வெடி விபத்து தலைநகரின் பல பகுதிகளில் எதி்ரொலித்தது. மேலும் நகர மையப்பகுதியில் கருமையாக புகை சூழ்ந்திருந்தது.

சில உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் பெய்ரூட்டின் துறைமுகத்தில் வெடி விபத்து நடந்ததாக தகவல் தெரிவித்துள்ளன.

துறைமுகத்தில் இருந்து நூறு அடி தூரத்தில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும், வெடி விபத்தை அடுத்து நகரத்தில் ஒரு கரும் புகை வெளியேறியதாகவும் அங்குள்ள குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.


லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 4,000 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று செவ்வாயன்று ஏற்பட்ட இந்த வெடி விபத்தால் தலைநகரம் குலுங்கியதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

“இப்போது வரை பலர் காணவில்லை. மக்கள் தங்களது அன்புக்குரியவர்களைப் பற்றி அவசர சிகிச்சைப் பிரிவைக் கேட்கிறார்கள், மின்சாரம் இல்லாததால் இரவில் தேடுவது கடினம் ”என்று அந்த நாட்டின் சுகாதாரஅமைச்சர் ஹமாத் ஹசன் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

“நாங்கள் ஒரு உண்மையான பேரழிவை எதிர்கொள்கிறோம், சேதங்களின் அளவை மதிப்பிடுவதற்கு நேரம் தேவை.”

பெய்ரூட் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 க்கும் அதிகமாக உள்ளது என்று சுகாதார அமைச்சர் கூறுகிறார்

Today rasi palan – 05.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 05, 2020)

About அருள்

Check Also

உலக நாடுகள் சீன வைரசால் பாதிக்கப்பட்டன

உலக நாடுகள் சீன வைரசால் பாதிக்கப்பட்டன

உலக நாடுகள் சீன வைரசால் பாதிக்கப்பட்டன கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நம்முடைய நாட்டை மறுகட்டமைப்பு செய்யும் மிக பெரிய …