தமிழீழ செய்திகள்முக்கிய செய்திகள்

அடங்காத ஈழ மண்..! மாவீரர் நாளில் ஒன்று திரண்ட தமிழீழ மக்கள்..!

கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தனிநாடு அடைவதற்காக தீவிரமாக போராடி வந்தனர்.

இறுதியாக நடந்த நான்காம் கட்ட போரில் பல்வேறு நாடுகளின் உதவியுடன் புலிகளை அளிப்பதாக கூறி இலங்கை ராணுவம் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்துத்தது.

அதன்பிறகு விடுதலை புலிகள் இயக்கம் அளிக்கப்பட்டுவிட்டதாகவும் இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் முற்று பெற்று விட்டதாகவும் இலங்கை அரசு சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. போரில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து உலகெங்கும் வாழும் மனிதநேய ஆர்வலர்கள் தற்போது வரை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விடுதலைப்புலிகள் உயிர்ப்போடு இருந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 27 ம் தேதி ‘மாவீரர் நாள்’ கடைபிடிக்கப்பட்டு வந்தது. போரில் உயிரிழந்த வீரர்கள் ஈழத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைக்கப்பட்டிருப்பார்கள்.

ஒவ்வொரு வருடமும் அவர்களை இந்த நாளில் உறவினர்கள், நண்பர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்த்த போராளிகள் என அனைவரும் நினைவு கூறுவர்.

இந்த நாளில் தான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மக்களுக்கு உரையாற்றுவார். கடைசியாக கடந்த 2008ம் ஆண்டு பிரபாகரன் மாவீரர் நாள் உரையாற்றி இருந்தார்.

போர் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு தமிழீழத்தின் மொத்த பகுதியும் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. அதன்பிறகு மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

என்றாலும் ஒவ்வொரு வருடமும் இலங்கையில் தமிழ் மக்கள் ஒன்று கூடி மாவீரர் நாளில் தங்கள் உறவுகளை நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

இந்த வருடமும் மாவீரர் நாள் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடங்களில் ஒன்று திரண்ட மக்கள், போரில் இறந்தவர்களுக்கு தீபம் ஏற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இன்று காலை கல்லூரி வளாகத்தில் தடையை மீறி மாவீரர் தினத்தை அனுசரித்தனர்.

இதே போன்று பல்வேறு இடங்களிலும் ராணுவத்தினரின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி தமிழ் மக்கள் உயிர்நீத்த போராளிகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இலங்கையில் தற்போது ராஜபக்சே குடும்பத்தினர் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

அதை மெய்ப்பிக்கும் வகையில் ஆட்சி பொறுப்பை ஏற்ற கையுடன் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய ராணுவத்தினரை காவலுக்கு நிறுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே நேற்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 65 வது பிறந்த தினம் உலகெங்கும் வாழும் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இலங்கையில் பல்வேறு கட்டுப்பாடுகள் மத்தியில் பலர் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடினர். தமிழகத்திலும் பல இயக்கத்தினர் அவரது பிறந்தநாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close