Breaking News
Home / Medical note / ஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்..

ஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்..

ஆண்கள் ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைப்படுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.

சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் பழுதடைந்து ‌விரைவில் சிதைந்துவிடுகிறது. இதனால் ஆண்களுக்கு விரைப்புத் தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுதல், விந்து முந்துதல், செக்ஸ் உணர்ச்சி குறைந்துவிடுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தோன்றுகின்றன.

நடு‌த்தர வயதைத் தொட்ட பல ஆண், பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது பரவலாக அதிகரித்து வருகிறது. ஆண்கள் ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைப்படுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.

பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாதவர்களில் 50 விழுக்காட்டினர் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆண்மைக் குறைவுக்கு ஆளாகிறார்கள்.

ஆண்களுக்கு விரைப்பை ஏற்படுத்தும் காரணிகள் எல்லாம் சர்க்கரை வியாதியின்போது சிதைக்கப்படுகிறது என்பது பொதுவான விஷயம். ஆனால் ஆண்கள் கூடுதலாக புகை, போதை மற்றும் மது போன்ற பழக்கங்களில் ஈடுபடுதல், கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்தல், அதிகமாக மன இறுக்கம், வேலைச்சுமை, டென்ஷன், அதிக சொகுசாக வாழ்தல் போன்ற பல காரணிகளுடன் அதிக தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஓய்வில் அதிக நாட்டத்தைக் காட்டுகிறார்கள்.

இதனால்தால் ஆண்களுக்கு சர்க்கரை வியாதியால் அதிக பாதிப்புகள் உண்டாகின்றன.

Check Also

35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்

30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 …

error: Content is protected !!