Breaking News
Home / Medical note / பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை; உளவியல் ஆலோசனை

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை; உளவியல் ஆலோசனை

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முடிவுக்குக் கொண்டு வர உளவியல் மருத்துவரின் ஆலோசனைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

எல்லா இடங்களிலும், எல்லா துறைகளிலும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு வீட்டிலும் பள்ளியிலும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

பெண்கள் தனக்கு ஏற்படும் பாலியல் சீண்டலை தைரியமாக வெளிக்கொண்டு வந்து சட்டப்படி குற்றவாளியைத் தண்டிப்பதற்கு முன் வர வேண்டும். பாலியல் சீண்டலை அவமானமாகக் கருதாமல் ஒருவர் இன்னொருவர் மீது தொடுக்கும் தாக்குதலாக கருதி அவரை சட்டத்துக்கு முன் நிறுத்தி அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க துணிய வேண்டும்.

ஆண்கள் சுய கட்டுப்பாடோடும், ஒழுக்கத்தோடும் இருக்க வேண்டியது அவசியம். எதிர்பாலினத்தவரை ஓர் அதிசய பொருளாக பார்க்காமல்
இயல்பாகப் பேசி பழக வேண்டும். எப்போதும் மனதில் பாலியல் சார்ந்த விஷயத்தையே நினைப்பது, படங்கள் பார்ப்பது போன்றவையிலிருந்து வெளிவர வேண்டும்.

இதுபோன்ற மாற்றங்கள் நிகழ, பாடத்திட்டத்தில் செக்ஸ் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாலியல் சார்ந்த பிரச்னைகளை கணக்கில் கொண்டு அதற்கேற்ப பாலியல் கல்வியை அமைக்க வேண்டும்.முக்கியமாக, பெண்களை மதிக்கும், பாதுகாக்கும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்க வேண்டும்.

ஆண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத் தர வேண்டும். பெண் குழந்தைகளை தைரியம் கொடுத்து வளர்க்க வேண்டும், பெரும்பாலும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிற பெண்கள் பயந்த மற்றும் பாதுகாப்பில்லாமல் இருக்கும் பெண்களையே தேர்ந்தெடுப்பதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

மேலும் சக மனிதரை நேசிக்கும் பண்பு, மனிதநேயம், ஒருவரை பலாத்காரத்துக்கு உட்படுத்துவது பாவம்; தவறு என்று ஆண்கள் உணரும் ஆரோக்கிய சமுதாயமாக நாம் உருவாகும்போது பாலியல் பலாத்காரம் எனும் ஈன கொடிய செயலை இல்லாமலே ஆக்க முடியும்’’.

Check Also

மருத்துவ பண்புகளை கொண்ட செங்காந்தள் மலர்

செங்காந்தள் செடியின் கிழங்கு ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் பல்வேறுவிதமாகப் பயன்படுத்தப்படுகிறது. செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. …

error: Content is protected !!