Breaking News
ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா மீது நடவடிக்கை பாயும் – ஜெயக்குமார் உறுதி

நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசிய ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிற்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரமடைந்த ஹெச்.ராஜா, நீதிமன்றத்தையும் போலீசாரையும் மிக தரக்குறைவாக விமர்சனம் விமர்சித்தார்.

அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் நேற்று வைரலாக பரவியது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “நீதிமன்றம், காவல்துறை பற்றி ஹெச்.ராஜா மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்; சட்டவல்லுநர்களின் கருத்தை கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரையும், நீதிமன்றத்தையும் மிகவும் தரக்குறைவாக பேசியிருக்கும் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும் என ஜெயக்குமார் கூறியிருப்பது வரவேற்கத்தக்கதுதான்.

ஆனால், இந்த விவகாரத்தையும் எஸ்.வி.சேகர் விவகாரம் போல் தமிழக அரசு மாற்றாமல் இருக்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, பொதுநலனுக்காக போராடுபவர்கள் மீது ஏதோ ஒரு காரணத்தை கூறி நடவடிக்கை எடுக்கும் காவல்துறை இந்த விவகாரத்தில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் ராஜாவை கைது செய்ய வேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால் அது தமிழக காவல்துறைக்கு அழிக்க முடியாத அழுக்காகவே இருக்கும் என பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …