Breaking News
அறிகுறிகளே இல்லாமல் கொரோனா - அமைச்சர்

அறிகுறிகளே இல்லாமல் கொரோனா – அமைச்சர்

அறிகுறிகளே இல்லாமல் கொரோனா – அமைச்சர்

தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 805 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17ஆயிரத்தை கடந்துள்ளது. இதில், 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகளே இல்லாமல் கொரோனா இருந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுவந்தாலும், பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாநிலத்தில் மேலும் 805 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவித்தார். இதில், 93 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.

இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17ஆயிரத்து 82-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 549 பேர் பாதிக்கப்பட்டால், ஒட்டுமொத்த பாதிப்பு 11,125-ஆக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

தமிழகத்தில் மேலும் 407 பேர் உள்பட இதுவரை 8 ,731 பேர் குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 118-ஆக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகபட்ச பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஒட்டுமொத்த பாதிப்பில் வெறும் 12 சதவீத பேருக்கு மட்டுமே அறிகுறிகள் இருந்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அவர்களுக்கு எந்தெந்த அறிகுறிகள் எத்தனை பேருக்கு இருந்தது என்பது பற்றியும் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமாக கூறினார்.

உயிரிழப்பு விகிதத்தைப் பொருத்தவரை, 84 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிற தீவிர நோய் இருந்ததாகவும் அமைச்சர் கூறினார்.

தமிழகத்தில் தான் உயிரிழப்பு விகிதம் குறைவாக இருப்பதாக கூறியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், 41 முதல் 60 வயது உள்ளவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் தலா 46.5 சதவீதம் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் ஆண்கள் 81 பேர் என்றும், பெண்கள் 37 பேர் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

ஊருக்குள் புகுந்த 15 அடி நீள ராஜநாகம்

About அருள்

Check Also

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை – வானிலை ஆய்வு மையம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் …