Breaking News
கையளிக்கப்படாமல் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் இல்லங்கள்

கையளிக்கப்படாமல் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் இல்லங்கள்

கையளிக்கப்படாமல் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் இல்லங்கள்

கடந்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் இதுவரையில் மீள கையளிக்கப்படவில்லை என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்களை இந்த மாத இறுதிக்குள் மீள கைப்பளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதுவரையில் பெரும்பாலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உத்தியோகப்பூர்வ இல்லங்களை கையளித்துள்ளனர்.

எனினும் மீள கையளிக்காத சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாத இறுதிக்குள் கையளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதங்களில் உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் கையளிக்கப்பட வேண்டும்.

அத்துடன் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய உத்தியோகப்பூர்வ இல்லங்களை அவர்களுக்கு பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

புதிய செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது – சீனா

பிரேசிலில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா

About அருள்

Check Also

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020) இன்றைய பஞ்சாங்கம் …