Breaking News
என்னை சேர்க்காவிடில்

என்னை சேர்க்காவிடில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி

திமுகவில் மீண்டும் என்னை சேர்க்காவிட்டால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என மு.க.அழகிரி எச்சரித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின், வரும் ஆக.28ம் தேதி கூடவிருக்கும் திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிடவுள்ளனர்.

இதனிடையே, வரும் செப்.5ம் தேதி சென்னையில் அமைதிப்பேரணி நடத்தப்போவதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுக்கு ஆயத்தமாகி வரும் அழகிரி, ‘செப்.5 சென்னை பேரணிக்கு பின் திருப்பம் வரும்’ என பகீர் கிளப்பினார்.

திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை மு.க.ஸ்டாலின் இன்று காலை தாக்கல் செய்தார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்தபோதே எந்தப் பதவிக்கும் நான் ஆசைப்பட்டதில்லை. எனக்கு தலைவராகும் எண்ணம் இல்லை. ஸ்டாலின் அவசரகதியில் தலைவர் பொறுபேற்கவுள்ளார். வேகமாக கட்சியை கைப்பற்ற முயற்சித்து வருகிறார்.

திமுக எனது தாய்க்கழகம். அதில் மீண்டும் நான் இணைவேன். இது தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறேன். கட்சியில் என்னை சேர்க்கவில்லை என்றால், வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …