Breaking News
திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக-வில் படிப்படியாக தனது செயலால் “செயல் தலைவராக” உயர்ந்த ஸ்டாலின், திமுக-வின் தலைவராக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார்.

ஓய்வறியாத கருணாநிதி மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

திமுக-வின் தலைவராக எத்தனையோ இடர்கள் வந்தபோதும், ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும், கட்சியை சுமார் 50 ஆண்டுகாலம் கட்டிக் காத்தவர் கருணாநிதி.

அவரது மறைவையடுத்து, இந்திய அரசியல் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்து வரும் திமுக-வின் தலைவராக கலைஞரின் மகனும், அக்கட்சியின் செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திமுக எனும் மாபெரும் இயக்கத்தின் தலைவராக கருணாநிதியின் மகன் என்பதால் எடுத்த எடுப்பிலேயே ஸ்டாலின் வந்து விடவில்லை.

கருணாநிதியும் எளிதில் அப்பதவியையும், கட்சியையும் யாருக்கேனும் விட்டுக் கொடுப்பவரல்ல.

கடந்த 1967-ஆம் ஆண்டில் பள்ளி மாணவராக இருந்த போது, தனது நண்பர்களுடன் இணைந்து, கோபாலபுரம் மாணவர் திமுக என்ற அமைப்பை தொடங்கிய ஸ்டாலின், அதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு சேவையாற்றினார்.

இதுவே பிற்காலத்தில் இளைஞர் திமுக என்றானது.

ஆனாலும், திமுக இளைஞரணியின் தலைவர் பதவிக்கு சிறிது சிறிதாகவே வளர்ந்து முன்னேறினார்.

மிசா சட்டத்தின் கீழ் கடந்த 1975-ஆம் ஆண்டில் சிறைவாசம் அனுபவித்த ஸ்டாலின், அதன்பின்னரே, தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவானார்.

1984-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

எனினும், அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் 4 முறையும், கொளத்தூர் தொகுதியில் 2 முறையும் வெற்றி பெற்றார்.

சென்னை மேயராக மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின், ஆற்றிய சேவைகள் இதுவரை எந்த மேயரும் ஆற்றாதவை என்றும், கடந்த 20 ஆண்டுகாலத்தில் இருந்த மேயர்களிலேயே, ஸ்டாலினுடையது மிக பெரிய பங்கு என்றும் கூறப்படுகிறது.

வட்டம், மாவட்டம், திமுக பொதுக்குழு உறுப்பினர், திமுக பொதுச்செயலாளர், திமுக பொருளாளர், சென்னை மேயர், இளைஞரணி, எம்எல்ஏ, அமைச்சர், துணை முதல்வர் என எதுவும் இவருக்கு எளிதாக கிடைத்து விடவில்லை.

கடந்த பேரவை தேர்தலின் போது, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 89.

இதுவரை எந்த எதிர்க்கட்சிகளும் பேரவையில் அமராத வகையில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக திமுக-வை அமர வாய்த்த பெருமை ஸ்டாலினையே சாரும்.

நமக்கு நாமே என படிப்படியாக திமுக செயல் தலைவர் வரை படிப்படியாக தனது செயல்களினால் முன்னேறிய ஸ்டாலின், கலைஞர் கருணாநிதிக்கு பின்னர் திமுக-வின் இரண்டாவது தலைவராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …