Breaking News
Home / இந்தியா செய்திகள் / தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு,பி.எம்.நரேந்திர மோடி திரைப்படம்.

தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு,பி.எம்.நரேந்திர மோடி திரைப்படம்.

Spread the love

பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பிஎம் நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.
இதில் மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலையொட்டி ‘பி.எம். நரேந்திர மோடி’ படம் வெளியாக தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் முடியும் வரையில் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தயாரிப்பாளர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த திரைப்படத்தில் அரசியல் பிரசாரம் கிடையாது, உத்வேகம் அளிக்கும் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் ஆணையத்திற்கு திரையிட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது.

மேலும் தேர்தல் ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த திரைப்படத்தை பார்த்த தேர்தல் ஆணையம், படத்தை வெளியிடக்கூடாது என குறிப்பிட்டு சீலிட்ட உறையில் அறிக்கையாக வைத்து கடந்த ஏப்ரல் 22ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவில் தலையிட முடியாது என கூறிய உச்ச நீதிமன்றம், எனவே, தேர்தல் முடியும் வரை ‘பி.எம். நரேந்திர மோடி’ படத்தை வெளியிட தடை விதித்தது.

Check Also

தேர்தல்

தேர்தல் வரலாற்றில் அதிக பெண் எம்பிக்கள் தேர்வு!!

Spread the loveமக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மொத்தம் 76 பெண் எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. முதல் …