தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

கடற்கரை குப்பைகளை கைகளால் அள்ளிய மோடி..

சீன அதிபருடனான சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து கோவளம் விடுதியில் தங்கியிருந்த பிரதமர் மோடி, காலை கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது, தனது கைகளாலேயே, குப்பைகளை அள்ளிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சீன அதிபர் ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் சந்திக்கும் நிகழ்வின் ஒரு அங்கமாக இருவரும் சேர்ந்து நேற்று மாமல்லபுரத்தின் புராதான சின்னங்களை பார்வையிட்டனர்.

இதனை தொடர்ந்து இன்று இருவரும் கோவளத்தில் சந்திக்கவுள்ளனர்.

இந்நிலையில் கோவளம் விடுதியில் தங்கியிருந்த மோடி, காலை கடற்கரைக்கு நடைபயணம் மேற்கொண்டார்.

அப்போது 30 நிமிடங்கள் கடற்கரையிலுள்ள குப்பைகளை தனது கைகளாலேயே அள்ளினார்.

பின்பு அந்த குப்பைகளை ஊழியர் ஜெயராஜிடம் ஒப்படைத்தார்.

ஒரு நாட்டின் பிரதமர் தனது கைகளாலேயே குப்பைகளை அள்ளிய சம்பவம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பேரழகு வாய்ந்த இடத்தை சீன அதிபருடன் பார்த்ததில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி

Tags
Show More

Related Articles

Back to top button
Close