இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

தமிழர்கள் அன்பும், உபசரிப்பும் தனித்துவமானது! மோடி உருக்கம்

தமிழர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா சந்திப்புக்காக ஷி ஜின்பிங், நேற்று மதியம் 1 மணி அளவில் சென்னை விமானநிலையம் வந்தடைந்தார்.

அவருக்கு, சென்னை விமானநிலையத்திலேயே மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆகிய கலைஞர்களின் வரவேற்பு நிகழ்ச்சி இருந்தது.

பின்னர், 4 மணி அளவில், கிண்டி தாஜ் ஹோட்டலிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் மாமல்லபுரம் சென்றார் ஷி ஜின்பிங்.

அப்போதும் அவருக்கு வழிநெடுக நாட்டுப்புற கலைஞர்களின் வரவேற்பு இருந்தது. பொதுமக்களும் ஷி ஜின்பிங் காண்பதற்கு ஆர்வமாக காத்திருந்தனர்.

தமிழக பயணம் குறித்த மோடியின் ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் !

Tags
Show More

Related Articles

Back to top button
Close