Breaking News
Home / இலங்கை செய்திகள் / 117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில்

117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில்

ஐ.தே.க., ஜே.வி.பி., கூட்டமைப்பு எம்.பிக்கள் நாடாளுமன்றத்துக்கு இன்று படையெடுப்பு!

சபையை உடன் கூட்டுமாறு சபாநாயகரிடம் 117 இற்கு மேற்பட்டோர் கூட்டாக வலியுறுத்து

நாடாளுமன்றக் குழு அறையில் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட கூட்டம் ஒன்றை தற்போது நடத்திக் கொண்டிருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் 117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில் படையெடுத்து வந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

எதிர்வரும் 16ஆம் திகதி வரை பொறுக்காமல் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு சபாநாயகரிடம் இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி கூடும் எனவும், அதுவரை அமைதி காக்குமாறும் இவர்களிடம் சபாநாயகர் தெரிவித்துள்ளார்

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய ராசிப்பலன் 19 பங்குனி 2019 செவ்வாய்க்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 19-03-2019, பங்குனி 05, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி பகல் 02.18 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. மகம் …