இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

இந்தியாவில் நாளை துக்கம் அனுஷ்டிப்பு!

- ஓமன் மன்னர் மறைவையடுத்து

ஓமன் நாட்டின் மன்னர் காலமானதையடுத்து இந்தியாவில் நாளை திங்கட்கிழமை அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓமன் நாட்டில் ஆட்சி செய்து வந்த சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் காலமானார். அவருக்கு வயது 79. 1970களில் அவரது தந்தை சயித் பின் தைமூரை ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு பதவிக்கு வந்த காபூஸ் பின் சையத் அல் சையத், எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். இந்நிலையில், நேற்று காபூஸ் மரணமடைந்ததாக ஓமன் அரசு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து ஓமன் மன்னர் சுல்தான் மறைவுக்கு நாளை இந்தியாவில் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாளை தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அரசு சார்ந்த பொழுது போக்கு நிகழ்வுகள் எதுவும் நாளை நடைபெறாது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags
Show More

Related Articles

Back to top button
Close