Breaking News
mullivaikal

வீடுகளில் நினைவுகூர அழைப்பு

வீடுகளில் நினைவுகூர அழைப்பு

2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை திங்கட்கிழமை தமிழர் தயாகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளையதினம் காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஆகுதியான ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈகைச்சுடரேற்றி பிரதான அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.

தற்போதைய சூழலில் கொரோனா கொள்ளை நோய் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றி இந்நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் உட்பட இதர காரணங்களால் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அனைத்து உறவுகளும் சமுகமளிக்க முடியாததன் காரணத்தில் நாளையதினம் மாலை 7 மணிக்கு அனைத்து இல்லங்களிலும் சுடர்களை ஏற்றி உயிர்நீத்த அன்புக்குரியவர்களை நெஞ்சில் ஆர்த்தி நினைவேந்துமாறு பொதுவான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள், சிவில் மற்றும் பொது அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தமது ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.

அதேபோன்று பிரித்தானியா, கனடா, நோர்வே, சுவிஸ், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜேர்மன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் புலம்பெயர் உறவுகளும் வீடுகளிலிருந்தவாறே நினைவேந்தலைச் செய்து அதன் ஒளி படங்கள் காணொளிகளை பொதுவான (#) காஸ்ராக் குறியீட்டை பயன்படுத்தி தரவேற்றம் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், நாளைதினம் எதோவொருவேளை முள்ளிவாய்க்கால் அவலத்தில் சிக்கித்தவித்த உறவுகளை நினைவுகூரும் வகையில் “முள்ளிவாய்க்கால் உப்புக்கஞ்சியை” பருகுமாறும் அனைத்து தரப்பினரிடத்திலும் பொதுவான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக பொருளாதாரத்தில் ஏற்ப்பட்ட வீழ்ச்சிஉலக பொருளாதாரத்தில் ஏற்ப்பட்ட வீழ்ச்சி

About அருள்

Check Also

போராளிகள்

போராளிகள் அனைவரும் ஒண்றிணைவர்

போராளிகள் அனைவரும் ஒண்றிணைவர் எதிர்வரும் காலங்களில் போராளிகள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருப்பதாக விடுதலைப்புலிகள் மக்கள் …