Home / விளையாட்டு / 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி.

46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 14
    Shares

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான 44-வது லீக் போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்தது.
மும்பை அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 67 (48) ரன்கள், லீவிஸ் 32 (30) ரன்கள் எடுத்தனர்.
சென்னை அணியில் சான்ட்னர் 2 விக்கெட், தீபக் சாஹர் மற்றும் இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட் விழ்த்தினர்.
இதனையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் ஷேன் வாட்சன் 8 ரன், அம்பத்தி ராயுடு 0 ரன், சுரேஷ் ரெய்னா 2 ரன், கேதர் ஜாதவ் 6 ரன், ஷோரே 5 ரன், தீபக் சாஹர் 0 ரன், ஹர்பஜன்சிங் 1 ரன் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் சென்னை அணி 17.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 38 (35) ரன்கள், சான்ட்னர் 22 (20) ரன்கள், பிராவோ 20 (17) ரன்கள் எடுத்தனர்.
மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய மலிங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
மேலும் கிருணல் பாண்டியா 2 விக்கெட், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட், அனுகுல் ராய் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 14
    Shares

Check Also

சாம்பியன் ஆனது இங்கிலாந்து

சாம்பியன் ஆனது இங்கிலாந்து

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. …