Breaking News
திடீர் விசிட் அடித்த அம்மா

திடீர் விசிட் அடித்த அம்மா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜின் குடும்பத்தார் திடீர் விசிட் அடிக்கும் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 71 நாட்கள் கடந்துள்ள நிலையில், போட்டியில் இருந்து 8 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து இந்த வாரத்துக்கான எவிக்‌ஷன் லிஸ்ட்டில் ஜனனி, டேனி, பாலாஜி ஆகியோர் நாமினேட்டாகி உள்ளனர்.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சி குறித்து வெளியான முதல் புரொமோ வீடியோவில், மும்தாஜின் குடும்பத்தார் பிக் பாஸ் வீட்டிற்கு திடீர் விசிட் அடிக்கின்றனர். மும்தாஜின் தாய், சகோதரர், அவரது மகன் ஆகியோர் வருவதனால், போட்டியாளர்களை ஃப்ரீஸ் ஆகும்படி பிக் பாஸ் உத்தரவிடுகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து 70 நாட்களுக்கு பின்னர் தாயை சந்தித்த மும்தாஜ் கண்ணீரால் தாயை வரவேற்கிறார். பின்னர் மும்தாஜ் ஃப்ரீஸில் இருக்கும்போதே அவர்கள் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும்போது, மும்தாஜ் கதறுவது போன்ற காட்சிகள் புரொமோ வீடியோவில் இடம்பெற்றுள்ளது

ஆகையால் இன்றைய பிக் பாஸ் வீட்டில் தாய் பாசமும், செண்ட்டிமென்ட்டும் நிறைந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …