Breaking News
வெளியேற்றப்பட்டார் மும்தாஜ்

வெளியேற்றப்பட்டார் மும்தாஜ்? இது தான் காரணமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் நடிகை மும்தாஜ் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 89 நாட்களை எட்டியுள்ள நிலையில், கமலின் பரிந்துரை பேரில் ஐஸ்வர்யா இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டார். அவருடன் மும்தாஜ், விஜயலக்ஷ்மி, ரித்விகா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஒரு சீரியஸ்னெஸ் வரணும்னா எவிக்ஷன் வரணும், ஓட்டு வித்தியாசம் ரொம்பலாம் இல்லை, ஒரு நூலிழை தான், நான் கண்டிப்பா இத எதிர்பார்க்கல, என்று சொல்லும் கமல் பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர்களின் பெயர்கள் கொண்ட கார்டை காண்பிக்கிறார்.

ஆனாலும் இந்த வாரம் நிச்சயம் ஒருவர் வெளியேற்றப்படுவார்.

இதில் ரித்விகா சேஃப்பாகியுள்ளார். அதனால் எஞ்சியுள்ள மும்தாஜ், விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா ஆகியோரில் மும்தாஜ் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறுகிறார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு வரும் ஐஸ்வர்யா இந்த வாரமும் காப்பாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …