முக்கிய செய்திகள்இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் 6 ஊடகவியலாளர்களுக்குக் கொலை எச்சரிக்கை!

- ஊடக அமையத்துக்குள் துண்டுப் பிரசுரங்கள்

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் 6 பேருக்கு கொலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் போடப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு ஊடக அமையத்தின் அலுவலகத்தின் உள்ளேயே குறித்த துண்டுப்பிரசுரங்கள் இன்று போடப்பட்டுள்ளன என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்கிரமதுங்கவின் நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டவர்களின் ஒளிப்படத்தில் குறித்த ஊடகவியலாளர்கள் 6 பேரின் முகங்களுக்கு வட்டம் இடப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப் பிரசுரத்தில், “எச்சரிக்கை! எச்சரிக்கை!! இவர்கள்தான் வெளிநாட்டுப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அரசுக்கு எதிராகச் செயற்படும் ரிப்போட்டர்ஸ். இவர்களுக்கு விரைவில் மரண தண்டனை விதிப்போம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close