Saturday , July 21 2018
Breaking News
Home / TamilFood / மட்டன் யாழ்ப்பாண வறுவல்

மட்டன் யாழ்ப்பாண வறுவல்

தேவையான பொருட்கள்
* மட்டன் – 500 கிராம்
* சின்ன வெங்காயம் – 20
* தக்காளி – 2
* பச்சை மிளகாய் – 2
* கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
* எண்ணெய் – 50 கிராம்
* தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
* உப்பு – தேவையான அளவு

தாளிக்க:
* பட்டை – ஒன்று
* கிராம்பு – ஒன்று
* சோம்பு – அரை தேக்கரண்டி
* சீரகம் – அரை தேக்கரண்டி

அரைக்க:
* மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
* சோம்பு – அரை தேக்கரண்டி
* சீரகம் – அரை தேக்கரண்டி
* கசகசா – ஒரு தேக்கரண்டி
* இஞ்சி – சிறிது
* பூண்டு – 8 பற்கள்

வறுத்து தூள் செய்ய:
* மிளகாய் – 10
* சீரகம் – அரை தேக்கரண்டி
* சோம்பு – அரை தேக்கரண்டி
* பட்டை – ஒன்று
* ஏலக்காய் – ஒன்று

செய்முறை :
* அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கறியுடன் சேர்த்துப் பிசறி வைக்கவும்.

* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, வறுத்துத் தூள் செய்ய வேண்டிய பொருட்களை வறுத்துத் தூள் செய்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் ஆகியவற்றைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* வதக்கியவற்றுடன் பிசறி வைத்திருக்கும் கறிக் கலவையைச் சேர்க்கவும்.

* பிறகு உப்பு, தனியா தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

* கறியில் உள்ள நீர் வற்றியவுடன் தூள் செய்தவற்றைச் சேர்த்து தீயைக் குறைத்து வைத்து 10 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

* சுவையான மட்டன் யாழ்ப்பாண வறுவல் தயார்.

Check Also

பூண்டு ஊறுகாய்!!

தேவையான பொருள்கள்: பூண்டு – 1/4 கிலோ எலுமிச்சை சாறு -150 மில்லி நல்லெண்ணெய் – 150 மில்லி உப்பு …