Breaking News
ஊர் பெயர்கள் மாற்றம் குறித்த அரசாணை வாபஸ்

ஊர் பெயர்கள் மாற்றம் குறித்த அரசாணை வாபஸ்

ஊர் பெயர்கள் மாற்றம் குறித்த அரசாணை வாபஸ்

2018-2019 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் க.பாண்டியராஜன், “தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அதனை செயல்படுத்த 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்” என்று அறிவித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரையின் அடிப்படையில், முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 1,018 ஊர்களின் பெயர்களில் தமிழ் உச்சரிப்பில் இருந்து ஆங்கில உச்சரிப்பில் வேறுபாடு உடைய பெயர்களில் திருத்தம் செய்து கடந்த 11-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

உதாரணமாக, திருவல்லிக்கேணி என்பதை ஆங்கிலத்தில் “Triplicane” என்று உச்சரித்து வந்த நிலையில் இனி அதை “Thiruvallikkeni” என்று உச்ச்ரிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை என்பதை “Tondiyarpet” என்பதில் இருந்து “Thandaiyaarpettai” என்று திருத்தப்பட்டு உள்ளது. வ.உ.சி நகர் – “V.O.C Nagar” என்பது “VA.OO.SI Nagar” ஆகவும், எழும்பூர் – “Egmore” என்பது “Ezhumboor” ஆகவும் மாற்றப்பட்டது.

கோயம்பத்தூர், வேலூர் ஆகிய ஊர்களின் பெயர் மாற்றங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகின. இந்த நிலையில், இந்த அரசாணையை திரும்ப பெறுவதாக அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

Today rasi palan – 19.06.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜுன் 19, 2020)

About அருள்

Check Also

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி தமிழக அரசு முதல் கட்டமாக 6 லட்சம் அரசு, …