இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

தமிழில் பாடினால் ‘தமிழீழம்’ மலரும்! – இது விமலின் கண்டுபிடிப்பு

தமிழில் பாடினால் ‘தமிழீழம்’ மலரும்! – இது விமலின் கண்டுபிடிப்பு

“இலங்கை சிங்கள – பௌத்த நாடு. எனவே, தேசிய கீதம் சிங்கள மொழியில்தான் பாடப்பட்டே ஆக வேண்டும். தமிழ் மொழியில் பாடினால் இந்த நாட்டில் இரண்டு பிரிவினர் இருக்கின்றார்கள் என்று அர்த்தப்படும். அந்த அர்த்தம் தனி நாடு உருவாகுவதற்கு – பிரபாகரன் விரும்பிய தமிழீழம் மலர்வதற்கு வழிவகுக்கும்.”

– இவ்வாறு தெரிவித்தார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச.

‘தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் பாடினால் அது மீண்டும் தமிழர்களைத் தனிநாடு கோருகின்ற நிலைக்குத் தள்ளிவிடும்’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் விமல் மேலும் கூறியதாவது:-

“தமிழர்களை உசுப்பேற்றுகின்ற வகையில் கருத்துக்களை வெளியிடுவதை ஜே.வி.பியினர் உடன் நிறுத்த வேண்டும்.

சிங்கள – பௌத்த நாடான இலங்கையில் சிங்களவர்களுக்கும் சிங்கள மொழிக்கும்தான் முதலிடம். இந்த வரையறைக்குள் இந்த நாட்டில் வாழும் சகல இனத்தவர்களும் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

ஒரு நாட்டுக்குள் ஒரு தேசியக் கொடியும் ஒரு தேசிய கீதமும்தான் இருக்கின்றன. அப்படி இருக்கின்றபோது தேசிய கீதம் மட்டும் ஏன் இரண்டு மொழிகளில் பாடப்பட வேண்டும்?

தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால் தேசியக் கொடியையும் இரண்டு வகைகளில் தமிழர்கள் கேட்பார்கள். தமக்கென ஒரு நாடு வேண்டும் எனவும் கேட்பார்கள். அந்த நிலைமையை நாம் ஏற்படுத்த விரும்பவில்லை. அதுதான் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டும் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளோம்” என்றார்.

தமிழில் பாடினால் ‘தமிழீழம்’ மலரும்! – இது விமலின் கண்டுபிடிப்பு

தனிநாடு கோருகின்ற நிலைக்குத் தமிழர்களைத் தள்ளுகிறீர்களா?

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close