Breaking News
புதிய கொரோனா வைரஸ் - அறிகுறிகள் என்ன என்ன?

புதிய கொரோனா வைரஸ் – அறிகுறிகள் என்ன என்ன?

புதிய கொரோனா வைரஸ் – அறிகுறிகள் என்ன என்ன?

இங்கிலாந்தின் பல பகுதிகளில் புதிய கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது.

இதனால் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை பல்வேறு உலக நாடுகள் ரத்து செய்துள்ளன. இந்த வைரஸ் பரவல் உலக நாடுகளை பேரதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அங்கு மேலும் ஒரு புதிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 2 பேருக்கு பரிசோதித்ததில் கொரோனாவின் மற்றுமொரு புதிய மாறுபாடு கண்டறியப்பட்டு இருக்கிறது.

இதுவும் இங்கிலாந்தில் சமீபத்தில் கண்டறியப்பட்டது போலவே வீரியமாக பரவும் திறன் கொண்டதாக அறியப்படுகிறது. தென்ஆப்பிரிக்காவில் இது மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவதாக இங்கிலாந்து சுகாதார மந்திரி மேத் ஹன்காக் தெரிவித்துள்ளார். புதன்கிழமை தகவலின்படி, இங்கிலாந்தில் 39,237 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், இந்த இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவுவதால் மீண்டும் மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர். இது ஏற்கனவே இருக்கும் வைரஸை விட 70 சதவீதம் வேகமாக பரவுகிறது என முதற்கட்ட ஆராய்ச்சி எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

இந்நிலையில், உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ், புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கொரோனா அறிகுறிகளாக இருப்பவைகளுடன் சேர்த்து, சோர்வு, பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசைவலி மற்றும் தோல் அரிப்பு ஆகிய 7 புதிய அறிகள் தென்படுவதாக அறிவித்துள்ளது.

Today palan 25.12.2020 | இன்றைய ராசிபலன் 25.12.2020

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …