Breaking News
வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் சீனாவிலும் பரவியது

வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் சீனாவிலும் பரவியது

வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் சீனாவிலும் பரவியது

உருமாறிய கொரோனா முதன்முதலில் இங்கிலாந்தில் உறுதி செய்யப்பட்டது. இந்த புதியவகை உருமாறிய கொரோனா பழைய கொரோனாவை விட 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மிகுந்த அச்சமடைந்துள்ள பல நாடுகள் இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.

இருப்பினும் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து தவிர பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் உறுதி செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில், சீனாவிலும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து சீனா திரும்பியுள்ள 23 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.இதுவரை கொரோனா பாதிப்புகளால் உலகமெங்கும் மொத்தம் 17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு – 3744 பேர் உயிரிழப்பு

About அருள்

Check Also

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …