Breaking News
இந்தோனேசியா நிலநடுக்கம்

இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 347 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லம்பாக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது.

அதிகமான தீவுகளை கொண்ட இந்தோனேசியா நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் சில நாட்களுக்கு முன்னர் சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பூமியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் வசித்துவரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது. பின்னர், இந்த சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

இதனிடையே, நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் தற்போது 347 ஆக அதிகரித்துள்ளது. அதில், 1,400-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் 1,65,000 பேர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். இதில் படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …