தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் புதிய வாக்காளர்களாக நான்கரை இலட்சம் பேர் இணைவு!

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்களாக நான்கரை இலட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ வெளியிட்டார்.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 5 கோடியே 91 இலட்சத்து 23 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் – 2,92,56,960 பேர், பெண் வாக்காளர்கள் – 2,98,60,765 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் – 5,472 பேர் உள்ளனர்

புதிய வாக்காளர்களாக நான்கரை இலட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு, இடமாற்றம் என 5,62,937 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close