இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் டெல்லி ஆளுநர்

நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் டெல்லி ஆளுநர்

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணை மனுவை டெல்லி ஆளுநர் நிராகரித்தார்.

நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இதற்கான உத்தரவு கடந்த 7-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திகார் சிறையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே, நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து வினய்குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுக்களை சுப்ரீம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டபடி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனு அனுப்பினார். இந்த கருணை மனுவை டெல்லி துணை நிலை ஆளுநர் நிராகரித்து, அதனை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளார். ‘

இனி, இந்த பரிந்துரையை உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும்.

பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானம் – டிரம்புக்கு முற்றும் நெருக்கடி

Tags
Show More

Related Articles

Back to top button
Close