இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

நீதியின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்

நிர்பயாவின் தாய் ஆவேசம்

நீதியின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னரும் தூக்கு தண்டனை காலதாமதமாகி போய்க் கொண்டிருப்பதால் நீதியும் மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம் என்றும் நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

தீர்ப்பு கூறப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் தண்டனையை நிறைவேற்றாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது

மாறி மாறி சீராய்வு மனுக்கள் குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்து கொண்டே இருப்பதால்தான் இந்த கால தாமதம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று நீதிமன்றம் வந்த நிர்பயாவின் தாய் ”குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என கடந்த 7 ஆண்டுகளாக காத்துக் கொண்டு இருக்கின்றோம் என்றும் ஆனால் காலதாமதமாகி கொண்டு வந்து பார்க்கும்போது நீதியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இழந்து விட்டோம் என்றும் கூறியுள்ளார்

குற்றவாளிகள் பலவிதமான தந்திரங்களை பயன்படுத்தி தண்டனையை காலதாமதப்படுத்தி வருவதாகவும் ஆனால் நீதிமன்றம் அதனை புரிந்து கொள்ளாமல் மேலும் மேலும் காலந்தாழ்த்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்

Today rasi palan 13.02.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 13 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை

இராணுவத்திடம் சரணடைந்த உறவுகளுக்கு நீதி கோரி போராட்டம்!

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close