தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

அலறவைக்கும் நித்யானந்தா வீடியோ !

பாலியல் பிரச்சனையில் சிக்கி பல்வேறு வழக்குகளால் இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நித்யானந்தா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

நித்யானாந்தா மீதான பாலியல் வழக்கு ஒன்றின் விசாரணை விரைவில் வரவுள்ள நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கன்னட சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது.

ஆனால் அவரது பாஸ்போர்ட் காலாவதி ஆகி விட்டதால் அவரால் வெளிநாட்டிற்கு சென்றிருக்க முடியாது என சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை எனப் போலிஸார் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு அறிவியல் மற்றும் ஆன்மீகம் பற்றி தன்பாட்டுக்கு ஏதாவது உளறிக்கொண்டு இருக்கிறார் அவர்.

அவரது இந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலம். அதுபோல இப்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் ‘இன்று எத்தனை பேர் சூரியன் உதித்ததைக் கவனித்தீர்கள்.

நான் காலையில் தியானத்தை முடிக்க காலதாமதம் ஆகவே நான் தியானத்தை முடிக்கும் வரை சூரியன் உதயமாகக் கூடாது எனக் கட்டளையிட்டேன்.

என் கட்டளையைக் கேட்டு சூரியன் 40 நிமிடங்கள் தாமதமாகவே உதித்தது.

இதை நீங்கள் கூகுளில் சரிபார்த்துக் கொள்ளலாம்.’ எனக் கூற அவரது சீடர்கள் அதற்குக் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர்.

ஆனால் நெட்டிசன்களோ இந்த வீடியோவை வைத்து செய்து வருகின்றனர்.

 

Tags
Show More

Related Articles

Back to top button
Close